header-logo.png

ADMISSION OPEN FOR 2024 - 2025; CONTACT: 8122969238, 9788806815, 9944182992



About

தமிழ்த்துறையைப் பற்றி:

    தமிழ்த்துறை 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கலை மற்றும் அறிவியல், வணிகம், மேலாண்மை மற்றும் கணினி அறிவியல் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கான பகுதி ஒன்றின் கீழ் மொழிப்பாடமாக இந்தத்துறை தமிழை வழங்குகிறது. படைப்பாளர்களாக, திறனாய்வாளராக, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்தவற்றில் திறமைமிக்கவர்களாக மாணவர்களின் வளர்ச்சிக்கு தமிழ்த்துறை உறுதுணையாக உள்ளது. தமிழ்த்துறை ஆசிரியர்கள் மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தை தூண்டுதல், தனித்திறனை வெளிக்கொணர்தல், படைப்பாற்றல் திறனை வளர்ப்பது மற்றும் மனித விழுமியங்களை கற்பித்து அறவழியில் செல்ல முழு மனதுடன் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்த்துறையின் பாடத்திட்டம் வாழ்க்கையின் மதிப்புகளைக் கற்று மாணவர்களுக்கு காலச் சூழலுக்கேற்ப வாய்ப்புகளை வழங்குககிறது மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்துகிறது. மேலும் தமிழ்த்துறையின் பாடத்திட்டம் மாணவர்களிடையே இலக்கிய அறிவை நன்கு விரிவாக்கும் விதத்திலும், சமூகம் பற்றிய அறிவை வளர்க்கும் வகையிலும், பேச்சுத் திறமையை மேம்படுத்தும் ககையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

     தமிழ்த்துறை மாணவர்களை தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் போன்ற பல்வேறு ஊடகத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கு பல திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்குகிறது. மேலும் பண்டைய மக்களின் வரலாறு, கலைகள், பண்பாடுகளை அறியும் வகையிலும், பாரம்பரிய கலைகளை மீட்டுருவாக்கம் வகையிலும் தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது.



தொலைநோக்குப்பார்வை : (Vision)

    கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களின் மொழி அறிவைப் பெருக்கவும், அவர்களின் படைப்பு மற்றும் கற்பனைத்திறன்களை வெளிக்கொணர்ந்து நேர்மறையான அணுகுமுறைகளை வளரச்செய்யவும், மாணவர்களின் ஆளுமையைப் போட்டி நிறைந்த உலகில் சுய அடையாளத்தோடும் தன்னம்பிக்கையுடனும் வளர வழி செய்கிறது.

தமிழ்த்துறையின் செயல் இலக்கு : (Mission)

  • மொழிப்பற்றை மாணவர்களிடையே ஊக்குவித்தல்.

  • மாணவர்களை பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றல் திறன் மிக்கவர்களாக வளர்த்தெடுத்தல்.

  • தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை மற்றும் இலக்கிய இலக்கண வளம் ஆகியவற்றை மாணவர்கள் உணரச்செய்தல்.

  • உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றான தமிழர் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் தமிழ் மொழியின் பங்களிப்பை எடுத்துரைத்தல்.



நோக்கம் : (Objective)

  • சமூகம் பற்றிய சிந்தனைகளைத் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் மூலம் ஏற்படுத்துதல்.

  • புதுக்கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் வாசிக்க வைத்தல், எழுத வைத்தல். மேலும் நூல்களைத் திறனாய்வு செய்யவும், விமர்சனம் செய்யவும் பயிற்சியளித்தல்.

  • தமிழ்நாடு அரசுப்பணியாளர் போட்டித்தேர்வு மையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்தல். மேலும் கலைகள் மற்றும் இலக்கியம் மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துதல்

  • மாணவர்களின் வாசிக்கும் ஆற்றலை ஊக்குவிக்கவும், தமிழ் இலக்கியத்தோடு தொடர்புடைய பிற நூல்களையும் மாணவர்கள் சுயமாக கற்று உணரச்செய்தல். மேலும் இலக்கியம் சார்ந்த வேலைவாய்ப்புகளைப் பற்றி மாணவர்களை அறியச் செய்தல்.

  • மாணவர்கள் பிழையில்லாமல் எழுதுவதற்கும், பேசுவதற்கும், கருத்துப்பரிமாற்றத்திற்கும் பயன்பாட்டு இலக்கணம் உதவுகின்றன என்பதை அறியச் செய்து பயிற்சியளித்தல்.




Faculty


Dr S Mazhalaisilambu.,MA.,MPhil
BEd.,PhD.,
Assistant Professor
mazhalaisilambu@kkcas.edu.in
Exp : 24 Years
Dr R Sudha.,MA.,MPhil.,PhD.,
Assistant Professor
sudha@kkcas.edu.in
Exp : 12 Years

Ms S Gokulpriya MA
Assistant Professor
gokulpriya@kkcas.edu.in
Exp : 1 Years

Activities

Department Activities

Academic Activities for the Year 2016-2017

கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி 2016-2017 ஆம் கல்வியாண்டு நிகழ்வுகளின் அட்டவணை

தமிழ்த்துறை

வ.எண் நாள் நிகழ்வு
1 22.07.2016 தமிழ் மன்றம் - தமிழ்ச்சாரல் தொடக்க விழா – “வையத் தலைமை கொள்”
2 09.09.2016பாரதி விழா : “பாரதி - தவமும் வரமும்”
3 08.02.2017 பக்தி இலக்கியச் சொற்பொழிவு – “ஆழ்வார்களும் நாயன்மார்களும்”
4 10.08.2016 சுதந்திர தின விழா போட்டிகள் : (வினாடி வினா, பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல்,எழுதுதல்)
5 21.10.2016 படைப்பிலக்கியப் பயிலரங்கம் : நாடகம், கவிதை, கட்டுரை, கல்வெட்டியல், கோயில்கலை
6 24.02.2017 கலை விழா போட்டிகள் : தனி நபர்நடனம், குழு நடனம், பாட்டு, கோலம், நாட்டுப்புற நடனம்
7 21.01.2017 மதிப்பு அடிப்படை கல்வி: “வாழப் பழகுவோம்”
8 02.12.2016 தேசிய கருத்தரங்கம் - “தமிழும் பிறமொழிகளும்”

Academic Activities for the Year 2017-2018

கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 2017-2018 ஆம் கல்வியாண்டு நிகழ்வுகளின் அட்டவணை

தமிழ்த்துறை

வ.எண் நாள் நிகழ்வு
1 12.07.2017 தமிழ் மன்றம் - தமிழ்ச்சாரல் தொடக்க விழா – முனைவர் மா.சுப்புரத்தினம், தமிழ்ப் பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி கோவை.
2 08.09.2017பாரதி விழா – திரு.ஜேம்ஸ் மார்க் பீட்டர், நிருபர் நியூஸ்18, சென்னை.
3 02.02.2018 கருத்தரங்கம் - சங்க இலக்கியம் - கலைமாமணி முனைவர் தே.ஞானசேகரன், தமிழ்ப் பேராசிரியர், பாரதியார் பல்கலைக்கழகம்
4 08.08.2017 to 10.08.2017 சுதந்திர தின விழா போட்டிகள் : (பேச்சுப் போட்டி, ஓவியம்ä, பாட்டு, திருக்குறள் ஒப்புவித்தல்,எழுதுதல்)
5 13.10.2017 மாணவர் கருத்தரங்கம்
6 05.02.2018கலை விழா போட்டிகள் : தனி நபர்நடனம்இ குழு நடனம், பாட்டு, கோலம், நாட்டுப்புற நடனம், மெகந்தி.
7 10.01.2018 படைப்பிலக்கியப் பயிலரங்கம் : “கவிதை” – கவிஞர் விஜய் பாரதி

Academic Activities for the Year 2018-2019

கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 2018-2019 ஆம் கல்வியாண்டு நிகழ்வுகளின் அட்டவணை

தமிழ்த்துறை

வ.எண் நாள் நிகழ்வு
1 12.07.2018 தமிழ் மன்றம் - தமிழ்ச்சாரல் தொடக்க விழா – முனைவர் மதியழகன் தமிழ்ப் பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி உடுமலை.
2 20.07.2018 நேசத்தோடு வாசிப்போம்
3 04.09.2018கருத்தரங்கக் கட்டரைகள் வாசித்தல்:
1. சின்னஞ்சிறு கதைகள் பேசி,
2. சிந்தனை செய் மனமே, 3. நல்லாரைக் காண்பது,
4. விழித்தெழு செயல்படு, 5. செய்வது துணிந்து செய்,
4 21.12.2018பத்தி இலக்கியக் கருத்தரங்கம் : முனைவர் சாந்தகுமார், தமிழ்ப் பேராசிரியர், தமிழ்க் கல்லூரிä, கோவை.
5 15.02.2019தமிழ் மன்றம் - தமிழ்ச்சாரல் நிறைவு விழா.
6 07.08.2018 to 09.08.2018சுதந்திர தினவிழா போட்டிகள்: தமிழோடு பேசு (இலக்கியம் தொடர்பாக), வார்த்தை விiளையாட்டு, பேச்சுப் போட்டி, ஓவியம், நாடகம், கவிதை
7 11.01.2019பொங்கல் விழா : கிராமிய தொடர்பான பாடல், நடனம், மெய்க்கூத்து. கோலப் போட்டி.
8 23.01.2019 to 24.01.2019குடியரசு தின விழா போட்டிகள்: பேச்சு, ஓவியம், கவிதை, கட்டுரை வாசித்தளித்தல்.
9 05.10.2018தொல் பொருள் ஆய்வு (வரலாற்று உலா)

Academic Activities for the Year 2019-2020

கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 2019-2020 ஆம் கல்வியாண்டு நிகழ்வுகளின் அட்டவணை

தமிழ்த்துறை நிகழ்வுகள்

வ.எண் நாள் நிகழ்வு சிறப்பு விருந்தினர்
1 19.06.2019 to 20.06.2019 தமிழ் இலக்கியம் அறிமுகம் - இரண்டு நாள் கருத்தரங்கம். முனைவர் முருகேசன் துறைத்தலைவர், தமிழ்த்துறை, கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் - 18.
2 27.06.2019தமிழ் மன்றம் துவக்க விழா முனைவர் புனிதா உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி கோயம்புத்தூர் - 18
3 12.07.2019மாணவர் பேச்சுப்போட்டி, விவேகானந்தர் விழா மற்றும் இளைஞர் தின விழா – பேச்சுப்போட்டி, வினாடி வினா தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
4 30.07.2019மாணவர் கருத்தரங்கம் - இலக்கிய கட்டுரைகள் வாசித்தல்.தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
5 06.08.2019 to 07.08.2019சுதந்திர தினவிழா போட்டிகள்: பேச்சுப் போட்டி, ஓவியம், கவிதை, கண்காட்சி. தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
6 21.08.2019 ஷகேட்பினும் பெரிது கேள்ஷ வாழ்வியல் ஆளுமை பண்புகள். பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப்பயிற்சி.தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
7 07.09.2019 தமிழகக் கலைகள் - தேசிய கருத்தரங்கம்தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
8 11.09.2019விரிவாக்கப் பணித்திட்டம் - ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (பேச்சுஇ கட்டுரைஇ ஓவியம்இ பாடல் ஒப்புவித்தல்).தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
9 20.09.2019வரலாற்று உலா – தொல்லியல் சார்பாக. வரலாற்று உலா – தொல்லியல் சார்பாக.
10 18.10.2019காந்தியச் சிந்தனை – கருத்தரங்கம்தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
11 04.12.2019 படைப்பிலக்கியப் பயிற்சி – கவிதை, கட்டுரை, பேச்சு (ஏதேனும் ஒன்று)கவிஞர் பட்டிமன்ற பேச்சாளர் மு.ஷாஜஷான்.
12 10.01.2020பொங்கல் விழா போட்டிகள் - உரியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி.தமிழ்த்துறை பேராசிரியர்கள், மற்றும் பிற துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
13 24.01.2020 இலக்கியப் போட்டிகளதமிழ்த்துறை பேராசிரியர்கள, கோவை

Academic Activities for the Year 2020-2021

வ.எண் Date Event Achievements
1 04-12-21 தமிழ் மன்ற துவக்க விழா தாய்மொழியாம் தமிழின் பெருமை, தொன்மை, இலக்கியத்தில் இயற்கை வளம், தனிச்சிறப்பு, உலக அரங்கில் தமிழின் இடம் போன்றவற்றை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
2 10-12-21முதல்13-12-21 பாரதி விழா 2021 (கவிதை,கட்டுரை,ஓவியம்,திறனறித் தேர்வு,பாட்டு) மாணவர்களது படைப்பாற்றல் திறன், பேச்சாற்றல குறல் வளம், தமிழ்மொழி சொல்லாற்றல் திறன் முதலியன வெளிக் கொணரப்பட்டன.
3 23-10-21 TNPSC பாடத்திட்டம் மற்றும் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம அரசு துறையில் நடைபெறும் தேர்வு பற்றிய விழிப்புணர்வு, தேர்வு இடம்பெறும் பாடத்திட்டம் போன்றவற்றை அறிந்து கொண்டனர்.

Extension Activities

வ.எண் நாள் நிகழ்வு
1 18.01.2019 விரிவாக்கப் பணித்திட்டம் - அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிபுரம் (பேச்சு, கட்டுரை, ஓவியம், பாடல் ஒப்புவித்தல்)
2 04.08.2017விரிவாக்கப் பணித்திட்டம் - அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிபுரம் (பேச்சு, கட்டுரை, ஓவியம், பாடல் ஒப்புவித்தல்)
3 06.01.2017விரிவாக்கப் பணித்திட்டம் - அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிபுரம் (பேச்சு, கட்டுரை, ஓவியம், பாடல் ஒப்புவித்தல்)

Proposed Activities

கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) 2021 - 2022 ஆம் கல்வியாண்டு நிகழ்வுகளின் அட்டவணை தமிழ்த்துறை நிகழ்வுகள்

வ.எண் நாள் நிகழ்வு சிறப்பு விருந்தினர்
1 ஜூலை 2021 தமிழ் மன்றம் துவக்க விழா – கருத்தரங்கம் (Seminars Organized ) முனைவர் புனிதா உதவிப்பேராசிரியர். தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி கோயம்புத்தூர் - 18
2 ஆகஸ்ட் 2021சுதந்திர தினவிழா போட்டிகள்: பேச்சுப் போட்டி, ஓவியம், கவிதை, கண்காட்சி. (Soft Skill Development Programme)தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
3 செப்டம்பர் 2021 ஷகேட்பினும் பெரிது கேள்ஷ வாழ்வியல் ஆளுமை பண்புகள். பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப்பயிற்சி. (Faculty Development Programmes)தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
4 செப்டம்பர் 2021மாணவர் கருத்தரங்கம் - இலக்கிய கட்டுரைகள் வாசித்தல். (Soft Skill Development Programme)தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
5 அக்டோபர் 2021விரிவாக்கப் பணித்திட்டம் - ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (பேச்சு, கட்டுரை, ஓவியம், பாடல் ஒப்புவித்தல்). (Extension Activities)தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
6 அக்டோபர் 2021 வரலாற்று உலா - தொல்லியல் சார்பாக. (Value Based Programme)தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
7 நவம்பர் 2021 காந்தியச் சிந்தனை – கருத்தரங்கம் (Seminars Organized )தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
8 ஜனவரி 2022குடியரசு தினவிழா - படைப்பிலக்கியப் பயிற்சி - கவிதை, கட்டுரை, பேச்சு (ஏதேனும் ஒன்று) (Soft Skill Development Programme)தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
9 ஜனவரி 2022 பொங்கல் விழா போட்டிகள் - உரியடித்தல், கயிறு இழுத்தல், கோலப்போட்டி. (Soft Skill Development Programme)தமிழ்த்துறை பேராசிரியர்கள், மற்றும் பிற துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.
10 பிப்ரவரி 2022தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி. (Soft Skill Development Programme)தமிழ்த்துறை பேராசிரியர்கள், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி.

Programme Educational Objectives and Programme Outcome


Programme Educational Objectives (PEO)

PEO1: தமிழ் இலக்கிய வளர்ச்சியை அறிந்து கொள்ளுதல்

PEO2: தமிழ் இலக்கிய வரலாற்றினைக் கால வரிசைப்படி அறிதல்

PEO3: மொழிபெயர்ப்பின் அவசியம் அறிதல்

PEO4: மொழி வளர்ச்சிக்கான பயன்பாட்டு இலக்கணத்தை அறிதல்

PEO5: பேச்சுத்திறனை மேம்படுத்துதல்

PEO6: தன்னம்பிக்கை மற்றும் அறப்பண்புகளை வளர்த்தல்

PEO7: படைப்பாற்றல் திறன் மற்றும் படிக்கும் ஆர்வத்தை வளர்த்தல்

PEO8: பண்பாட்டுக் கல்வியினை அளித்தல்

PEO9: வரலாற்று செய்திகளை நினைவூட்டல்

PE1O: பாரம்பரிய கலைகள் மற்றும் பண்பாட்டை அறிந்து கொள்ளுதல்.


Programme Outcomes (PO)

PO1: தாய்மொழியாம் தமிழ்மொழியின் வளம், திறம், வரலாறு, உயர்வு, சிறப்பு போன்றவைகளை கல்லாதவரும் அறியும் வகையில் செம்மொழியின் மாண்பு எந்நாளும் செழிப்பதற்கு பல பட்டிமன்றம், மாநாடு, கருத்தரங்கு நடத்தி தமிழின் சிறப்பை அறியச்செய்வார்கள்.

PO2: இன்றைய தகவல் தொழில்நுட்பவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற உயிர்த்துடிப்புடன் தமிழ்மொழி தழைத்துச் செழித்திட தமிழை வலைதளங்களில் உலவ வழிவகைச் செய்வர்.

PO3: மாணவர;கள் நல்ல பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும், கதையாசிரியராகவும், நிகழ்ச்சித்தொகுப்பாளராகவும், குறும்படத் தயாரிப்பாளராகவும் அந்தந்த துறையில் ஆளுமை மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள்.

PO4: உலகளாவிய நோக்கில் ஒற்றுமை உணர்வினை உருவாக்கி தமிழின் சிறப்பை உலகறியச் செய்வார்கள்.

PO5: நடைமுறை வாழ்வியலுக்குத் தேவைப்படும் மொழிபெயர்த்தல் துறையில் சிறந்தவர்களாகவும் மற்றும் உள்ளூர் வரலாற்றை அறிந்து அதன் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார்கள்.

header-logo.png